×

சத்தியமூர்த்தி தேவர் உடல்நலக்குறைவால் காலமானார்: ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனின் சகோதரர் சத்தியமூர்த்தி தேவர் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; தேசியத் தலைவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவாலயப் பொறுப்பாளர் திருமதி காந்தி மீனாள் நடராஜன் அவர்களின் சகோதரரும், திருவாளர்கள் ச. பழனி, ச. வெள்ளைச்சாமி மற்றும் ச. தங்கவேலு ஆகியோரின் தந்தையுமான திரு. த. சத்தியமூர்த்தி தேவர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

சகோதரரை இழந்து வாடும் திருமதி காந்தி மீனாள் நடராஜன் அவர்களுக்கும், தந்தையை இழந்து வாடும் புதல்வர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post சத்தியமூர்த்தி தேவர் உடல்நலக்குறைவால் காலமானார்: ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Sathyamurthy Devar ,O. Panneerselvam ,Chennai ,Satyamurthy Devar ,Gandhi ,Meenal Natarajan ,Pasumpon Muthuramalingath Devar Memorial ,O. ,
× RELATED அதிமுகவில் உறுப்பினராக இல்லாத...