×

அதிமுகவை விழுங்கும் வேலையை செய்கிறது பாஜ: திருமாவளவன்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: ஜனநாயகம் என்ற மாநாட்டை டிச.23ம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். காலியாக உள்ள எஸ்சி, எஸ்டி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற 17ம்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜ, திமுகவை அச்சுறுத்துவதாக நினைத்து கொண்டு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அதிமுக இல்லை, பாஜ உள்ளதாக காட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பல கோடி செலவு செய்யும் வகையில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தில் பங்கேற்பது அதிமுக மற்றும் பாமகவினர் தான். இதன்மூலம் அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜ செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவை விழுங்கும் வேலையை செய்கிறது பாஜ: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Thirumavalavan ,Chidambaram ,Liberation Tigers ,Chitambaram ,Cuddalore district ,
× RELATED என் சொந்த தொகுதியான...