×

டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: 2022 டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வருகிற 30ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் 2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய பயிற்றுனர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப இருக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க ஆசிரியர் தகுதித் தேர்வு என்று அழைக்கப்படும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக டெட் 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த வகையில் 2022 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்தவர்களில் பலர் அதனை தொலைத்துவிட்டதாகவும், அவர்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனை ஏற்று, 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2 தேர்ச்சி சான்றிதழை வருகிற 30ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள மீண்டும் வாய்ப்பு வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

The post டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Teacher Examination Board ,CHENNAI ,
× RELATED இடைநிலை ஆசிரியர் தேர்வுக்காக நாளை...