×

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினரை விரைந்து நியமிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் காலாவதியாகி விட்டதால் ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆணையத்துக்கு 2022 டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 2023 மார்ச்சில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டதாகவும் ஒன்றிய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஓராண்டாக ஆணையம் செயல்படவில்லை. ஆணையத்துக்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2024 ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினரை விரைந்து நியமிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Union Govt ,National Commission for Backward Welfare ,Chennai ,Union government ,National Backward Welfare Commission ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED மணமான மகளுக்கு பெற்றோர் செய்யும்...