×

உலக பல்கலை. தரவரிசை சீனாவை முந்திய இந்தியா

புதுடெல்லி: க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் ஆசியாவில் அதிக பல்கலைக்கழகங்களுடன் சீனாவை இந்தியா முந்தி உள்ளது.க்யூஎஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. இந்த தரவரிசையில் அதிக பல்கலைக்கழகங்களுடன் ஆசிய கண்டத்தில் இந்தியா முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இப்பட்டியலில் 148 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 பல்கலைக்கழகங்கள் அதிகமாகும். சீனா 133 பல்கலைக்கழகங்களுடன் 2ம் இடம் பெற்றுள்ளது.

ஜப்பான் 96 பல்கலைக்கழகங்களுடன் 3ம் இடத்தில் உள்ளது. மியான்மர், கம்போடியா, நேபாள பல்கலைக்கழகங்கள் முதல் முறையாக தரவரிசையில் இடம் பிடித்துள்ளன.இந்தியாவைப் பொறுத்த வரை ஐஐடி பாம்பே முதல் இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த தரவரிசையில் 149வது இடத்தில் உள்ளது. ஐஐடி டெல்லி, ஐஐஎஸ்சி பெங்களூர், ஐஐடி கராக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி சென்னை ஆகியவை ஆசியாவின் டாப்-100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. உலக அளவில் ஐஐடி சென்னை 285வது இடத்திலும், அண்ணா பல்கலை. 427வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 526வது இடத்திலும் உள்ளன.

The post உலக பல்கலை. தரவரிசை சீனாவை முந்திய இந்தியா appeared first on Dinakaran.

Tags : World University ,India ,China ,New Delhi ,Asia ,QS ,Universities… ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு