×

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான 300 டிக்கெட்டுகள், அறைகள் நாளை முன்பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி டிசம்பர் 23ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி இரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனையொட்டி, வருகிற 10ம்தேதி (நாளை) காலை ஆன்லைனில் தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ https://ttdevasthanams.ap.gov.in/ttdevasthanam மொபைல் செயலி மூலம் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான 300 டிக்கெட்டுகள், அறைகள் நாளை முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi ,Tirupati ,Tirumala ,Tirupati Eyumalayan Temple ,Vaikunda ,Ekadasi ,
× RELATED 20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்