×

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நவ. 21ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் நவம்பர் 21ம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 21.11.2023 – செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு, பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நவ. 21ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Secretary General ,Palanisami ,District Secretaries Meeting ,Chennai ,Secretaries ,Edapadi Palanisami ,Palanisamy ,Dinakaran ,
× RELATED வெள்ள சேதங்களுக்கு எவ்வளவு செலவு ஆனது ? : பழனிசாமி கேள்வி