×

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசன பரப்பிற்கு 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

திண்டுக்கல்: பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசன பரப்பிற்கு 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசன பரப்பிற்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 09.11.2023 முதல் 17.03.2024 முடிய, நாள் ஒன்றுக்கு 20 கன அடி வீதம் 224.64 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமத்திலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசன பரப்பிற்கு 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Balaru Palakulam Dam ,Dadakulam ,Palaru Pailalaru Dam ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு...