×

அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியை கற்காதவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு

புதுடெல்லி: ‘இந்திய மொழிகள் அனைத்துமே சிறந்த மொழிதான். ஆனால், இந்தி அதிகமாக பேசப்படுவதால், அதை கற்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது,’ என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மகளிருக்கான இந்திரா காந்தி டெல்லி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் ஜனாதிபதியும், பாஜ மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு தலைமை விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:

புதிய தேசிய கல்வி கொள்கை -2020, தற்போதுள்ள கல்வி முறையில் நிறைய மாற்றங்களை கொண்டு வர உள்ளது. அனைத்து பல்கலைக் கழகங்களும், ஆசிரியர்களுமு் இந்த புதிய கல்விக் கொள்கையை படித்துவிட்டு, நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். இது அனைத்து மாநிலங்களுக்கும் எனது வேண்டுகோளாகும். நாட்டிற்கு நலன் பயக்கும் இந்த தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் எந்த அரசியலும் செய்ய வேண்டாம். மேலும், குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் தாய் மொழியில் பேச வேண்டும். அதே நேரத்தில், இந்த மொழியைத்தான் பேச வேண்டும் என்று திணிக்கக்கூடாது. இந்தியை உதாரணமாக, வைத்து ஒருவர் முடிந்தவரை பல மொழிகளை கற்க வேண்டும். இந்திக்கு தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது. இந்திய மொழிகள் அனைத்துமே சிறந்த மொழிதான். ஆனால், இந்தி அதிகமாக பேசப்படுவதால், அதை கற்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியை கற்காதவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Vice President ,Venkaiah ,New Delhi ,Former ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்