×

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற ஆதிசிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்குகல் நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் உச்சாநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே ஆகம விதியை பின்பற்றும் கோயில்களில் நியமிக்கப்படுகிறார்கள். அர்ச்சகர் நியமனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியது. தொடர்ந்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறியுள்ளார் என மனுதாரர் கூறியதற்கு, தமிழ்நாட்டில் கோயில்களை அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறினால் அவரிடம் செல்லுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று உத்தரவிட்டனர். தொடந்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil ,Archshakhar ,Delhi ,Tamil Nadu government ,Arshagar ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...