×

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் கார் கால்வாயில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு..!!

கர்நாடகா: மாண்டியாவில் கார் கால்வாயில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பாண்டவபுரா அருகே விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.விபத்துக்குறித்த விசாரணையில் துணைப்பிரிவு அதிகாரி நந்தீஷ் குமார் தெரிவிக்கையில், கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள திபட்டூரில் உள்ள குங்கரஹள்ளியை சேர்ந்தவர்கள், ஆனால் அவர்கள் பத்ராவதியில் வசித்து வந்தனர்.

மைசூருவில் ஒரு விழாவில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களின் கார் விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் கால்வாயில் இருந்து உடல்களை எடுத்தனர். பலியானவர்கள் சந்திரபாப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு மற்றும் ஜெயண்ணா என்பது அடையாளம் காணப்பட்டனர்.பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பலியானவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்று எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.

The post கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் கார் கால்வாயில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka state Mandy ,Karnataka ,Mandy ,Visveswaraya Canal ,Pandavapura ,
× RELATED ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நெல்...