×

நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் காலமானார்: அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

திருச்சுழி, நவ. 8: திருச்சுழி அருகே நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் ப.பா.போஸ் காலமானார். அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த ப.பா.போஸ்த்தேவர் திமுக நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ப.பா.போஸ் தேவர் உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோரைக்குளம் அவரது தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து போஸ்த்தேவர் உடலுக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றிய தலைவர்கள் பொன்னுத்தம்பி, காளீஸ்வரி சமயவேலு, முத்துமாரி, காரியாபட்டி நகராட்சி சேர்மன் செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் மணிவாசகம், ஒன்றியசெயலாளர்கள் நரிக்குடி கண்ணன், மந்திரிஓடை கண்ணன், சந்தனபாண்டி, மாவட்ட கவுன்சிலர்கள் கமலிபாரதி, தமிழ்வாணன், செம்போன்நெருஞ்சி சந்திரன், உள்பட திமுக கழக தொண்டர்கள், அரசு அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் காலமானார்: அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Narikudi ,South Union ,Thiruchuzhi ,PA Bose ,Narikudi South Union ,
× RELATED நரிக்குடி அருகே சேதமடைந்த மேல்நிலை...