×

மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்

புதுச்சேரி, நவ. 8: புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மருந்து வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர. குறிப்பாக, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒவ்வொரு மாதமும் மருத்துவரை சந்தித்து, அந்த மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவரை சந்தித்த பிறகு, அங்குள்ள மருந்தகத்தில் மருந்து வாங்க 300 நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் நோயாளிகள் பயன்பெறும்வகையில் கூடுதலாக மருந்து மற்றும் மாத்திரை வழங்கும் கவுன்டர்களை திறக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Jipmar Hospital ,Dinakaran ,
× RELATED வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜிப்மர்...