×

பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா

 

மல்லசமுத்திரம், நவ.8: மல்லசமுத்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் ஐப்பசி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா கடந்த 26ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நான்கு ரத வீதிகளின் வழியாக தாரை தப்பட்டை, வாண வெடி முழங்க 1000க்கும் மேற்பட்ட மக்கள், கம்பம் நடும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். விழாவில் நாளை (9ம்தேதி) தேரோட்டம் ந நடைபெற உள்ளது. காலை பொங்கல் வைத்தல், தீமிதி விழா நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் உமா, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், அறநிலையத்துறை அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுந்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

பூந்தேர் அழைத்தல், வண்டி வேடிக்கை, 600 கிலோ எடை உரல் இழுத்தல், அழகு குத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பேராசிரியர் பர்வீன் சுல்தானா தலைமையில் பட்டிமன்றம் மற்றும் சமூக நாடகங்கள் மற்றும் ஆன்மீக நிகழ்சிகள் நடைபெறுகிறது. 12ம்தேதி சத்தாபரணம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைக்கிறது. கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தினந்தோறும் அன்னதான வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஊர் பெரிய தனக்காரர் ராஜேந்திர பூபதி மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.

The post பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Great Mariamman Temple Festival ,Mallasamutram ,Periya Mariamman Temple Aippasi festival ,Periya Mariamman Temple Festival ,
× RELATED 70 தென்னங்கன்றுகள் வெட்டி சாய்ப்பு