×

நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

பேராவூரணி,நவ.8: 3 மாத சம்பளம் நிலுவை பாக்கியை வழங்க கோரி நூறுநாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராவூரணி தாலுகா அலுவலகம் எதிரே நூறுநாள் வேலைத் திட்ட சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர்கள் சித்திரவேலு (பேராவூரணி), சண்முகம் (சேதுபாவாசத்திரம்), பேராவூரணி ஒன்றிய தலைவர் கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மூன்று மாதங்களாக வழங்கப்படாத சம்பள பாக்கியை தீபாவளிக்கு முன்னதாக வழங்கி 200 நாட்களாக வேலை நாட்களை உயர்த்தி, தினக்கூலியை ரூ.600ஆக வழங்க வேண்டும். அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும். இலவச வீடு கட்ட வழங்கும் நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கருப்பையா, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் சின்னதம்பி ,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் துரை பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : PERAVURANI ,Dinakaran ,
× RELATED பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்