×

வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸில் தீபாவளி விற்பனை களைகட்டியது

 

ஈரோடு, நவ.8: ஈரோடு, காந்திஜி ரோடு, காளைமாடு சிலை அருகிலும், பூந்துறை ரோடு, ஓம் சக்தி மருத்துவமனை எதிரிலும், சோலார், ரவுண்டானாஅருகிலும், நசியனூர் ரோடு, சம்பத் நகரிலும் வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி கடை இயங்கி வருகிறது. தற்போது, இந்த கடைகளில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஸ்வீட் மற்றும் பேக்கரி தொழிலில் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இந்நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

எங்கள் நிறுவனத்தின் சார்பில் இந்த தீபாவளியை முன்னிட்டு லட்டு, ஜிலேபி, அல்வா, மைசூர்பா, பாதுஷா, வெண்ணிலா கேக், முந்திரி கேக், சாக்லேட் கேக். கோதுமை அல்வா, சோன்பப்படி, தூத்பேடா, பாதாம் அல்வா, ட்ரைஃப்ரூட் பழங்களினால் செய்யப்பட்ட இனிப்புகள் என பல்வேறு விதமான, வித்தியாசமான சுவைகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

பள்ளி, கல்லூரிகள், தொழில் வணிக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான இனிப்புகளை ஆர்டரின் பேரில் வாங்கிக் கொள்ளலாம். பிறந்தநாள் கேக்குகள் ஆர்டர் செய்தால் உடனுக்குடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தயாரித்து கொடுக்கிறோம். மேலும், அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் இனிப்பு, கார வகைகளும் தயார் செய்து தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். தீபாவளி ஸ்பெஷல் ஆர்டர்களுக்கு 9843018010, 98432 28010 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

The post வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸில் தீபாவளி விற்பனை களைகட்டியது appeared first on Dinakaran.

Tags : Venkateswara Sweets ,Erode ,Erode, Gandhiji Road ,Kalaimadu Statue ,Poonthura Road ,Opposite Om Shakti Hospital ,
× RELATED ஈரோட்டில் சொத்து வரி பாக்கி...