×

உடுமலை அருகே 2 கிராமங்களில் ஊராட்சி தலைவர் முயற்சியால் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு

 

உடுமலை, நவ.8: உடுமலை அருகே கல்லாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மயிலாடும் பாறை மற்றும் மாவிளம்பாறை ஆகிய கிராமங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மயான வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இறந்தவர்களின் உடல்களை அரசு நீர்நிலை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில், தங்கள் கிராமத்துக்கு என மயான இட வசதி செய்து தருமாறு திமுகவை சேர்ந்த கல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமியிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கொழுமம் மெயின் ரோடு முதல் ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் தானத்துக்காடு என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோரிக்கையை ஏற்று, உடனடி நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post உடுமலை அருகே 2 கிராமங்களில் ஊராட்சி தலைவர் முயற்சியால் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,panchayat ,Mayiladum Bhihi ,Mavilamparai ,Kallapuram ,
× RELATED தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை பெற கிராமங்களில் நாளை சிறப்பு முகாம்