×

வாட்ஸ்அப் குழு அமைத்து போதை மாத்திரை விற்ற ரவுடி கைது

சென்னை: வாட்ஸ்அப் குழு அமைத்து சைதாப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்பனை ெசய்து வந்த ரவுடியை போலீசார் கைது ெசய்தனர். அவனிடம் இருந்து 250 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.சைதாப்பேட்டை பகுதியில் வாட்ஸ்அப் குழு மூலம், போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி போலீசார் இரவு நேரங்களில் தீவிரமாக கண்காணித்த போது, துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த ‘சி’ கேட்டகிரி ரவுடியான சுரேஷ் (20), ஒரு பையில் போதை மாத்திரைகளை வைத்து வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார், ரவுடி சுரேஷை கைது செய்தனர். அவனிடம் இருந்து 250 போதை மாத்திரைகள் மற்றும் வாட்ஸ்அப் குழு அமைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் போதை மாத்திரைகள் குறித்து ரவுடி சுரேஷிடம் விசாரணை நடத்திய போது, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு ரயில் மூலம் சென்று அங்குள்ள மெடிக்கல் ஷாப்களில் அதிகளவில் போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்து வந்ததாகவும், போதை மாத்திரைகள் மட்டும் வாங்கும் வாலிபர்களுக்கு என தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வாட்ஸ்அப் குழுவில் உள்ள போதை மாத்திரைகள் வாங்கும் நபர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாட்ஸ்அப் குழு அமைத்து போதை மாத்திரை விற்ற ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,WhatsApp ,Chennai ,Saitappettai ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...