×

இஎஸ்ஐ பயனாளிகளுக்கு இன்று குறைதீர் முகாம்

சென்னை: இ.எஸ்.ஐ பயனாளிகளுக்காக சென்னையில் இன்று குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், சென்னை மண்டல அலுவலகம் சார்பில், தொழில் முனைவோர், காப்பீட்டாளர் (தொழிலாளிகள்) போன்ற இ.எஸ்.ஐ பயனாளிகளுக்கான குறைதீர் முகாம், இன்று (8ம் தேதி) பிற்பகல் 2.30 மணியளவில், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக சென்னை மண்டல அலுவலகம், எண்.143, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை 600034 என்ற முகவரியில் நடைபெறுகிறது. எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களின் குறைகளுக்கான தீர்வை பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஎஸ்ஐ பயனாளிகளுக்கு இன்று குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : ESI ,Chennai ,Labor Government Insurance Corporation ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...