×

தெற்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் தீபாவளிக்கு 60 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், எளிதில் பொதுமக்கள் பயணிக்கக்கூடிய வகையிலும் கூடுதலாக 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

குறிப்பாக, சென்னை- நாகர்கோவில்-சென்னை வழித்தடத்தில் 11 ரயில் சேவைகள், சென்னை – நெல்லை – சென்னை வழித்தடத்தில் 8 ரயில் சேவைகள், கொச்சுவெலி – எஸ்.எம்.வி.டி – கொச்சுவெலி வழித்தடத்தில் 4 ரயில் சேவைகளும், சென்னை – சந்திரகாஷி – சென்னை வழித்தடத்தில் 6 ரயில் சேவைகளும், சென்னை – புவனேஷ்வர் – சென்னை வழித்தடங்களில் 6 ரயில் சேவைகளும், நாகர்கோவில் – எஸ்.எம்.வி.டி – நாகர்கோவில் வழித்தடங்களில் 6 ரயில் சேவையும், எர்ணாகுளம் – தன்பாத் வழித்தடங்களில் 1 ரயில் சேவையும், நாகர்கோவில் – மங்களூரு ரயில்நிலையம் சந்திப்பு வழித்தடத்தில் 3 ரயில் சேவைகளும், மங்களூரு – நாகர்கோவில் வழித்தடத்தில் 3 ரயில் சேவைகளும், சென்னை – மங்களூரு – சென்னை வழித்தடங்களில் 6 ரயில் சேவையும், நெல்லை – சென்னை வழித்தடங்களில் 6 ரயில் சேவையும் இயக்கப்பட உள்ளது.

இந்த தீபாவளி சிறப்பு ரயில்கள் அனைத்து தென்னக மாநிலங்களை இணைக்கும் வகையில் உள்ளன. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரளா மற்ற மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் உள்ளது. சில ரயில் சேவை தாம்பரம், நாகர்கோவில், மங்களூரு செல்லும் இந்த சிறப்பு ரயில்கள் மற்ற மாநிலங்களில் உள்ள ரயில்வே நிர்வாகத்துடன் சேர்ந்து 36 ரயில் சேவைக்கு இணைந்து செயல்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெற்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் தீபாவளிக்கு 60 சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,southern states ,Chennai ,Southern Railway ,Diwali festival ,Dinakaran ,
× RELATED தீபாவளி சீட்டு நடத்தியவர் ₹13 லட்சம்...