×

திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் 100 வினாடி-வினா போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்

சென்னை: திமுக மகளிர் அணி சார்பில் நடந்து வரும் கலைஞர் 100 வினாடி-வினா போட்டியில் ெவற்றி பெறுவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார். திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டி நடக்கிறது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி முன்னெடுப்பில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வினாடி-வினா போட்டிகள் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ல் தொடங்கப்பட்டன.

போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டு நேற்று வரை 1,75,000க்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்துள்ளன. மேலும், 2,11,041க்கும் மேற்பட்ேடார் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். 7,30,897 பேர் www.kalaignar100.co.in இணைய தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர். முதல் சுற்று இணையவழி வினாடி வினா கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வருகிற 13ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வினாடி வினா போட்டி நடத்தப்படும். இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும். மண்டலத்தின் வெற்றியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெற உள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் 2 இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சம். வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

The post திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் 100 வினாடி-வினா போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : 100 ,DMK women's team ,CM ,M.K.Stalin ,Chennai ,DMK ,Women's Team Artist 100 Quiz Contest ,Chief Minister ,
× RELATED மதுரவாயல் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு..!!