×

மாமல்லபுரம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு, சிமென்ட் சாலை பணி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சியில், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் சிமென்ட் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் பாதாள சாக்கடையில் விடாமல், அருகில் உள்ள ஒரு குட்டையில் விடப்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் தூர்நாற்றம் வீசியது. இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் குட்டையில் விடப்படுவதை தடுக்கும் வகையில், வீட்டின் கழிவுநீர் குழாய்களை பாதாள சாக்கடையில் இணைப்பதற்காக அங்குள்ள சிமென்ட் சாலையை பெயர்த்தெடுத்து பணிகள் நடந்து வருகிறது.

மேலும், பெயர்த்தெடுத்த கான்கிரீட்கள் கழிவுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாலும், அச்சாலை குறுகிய சாலையாக இருப்பதாலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமமடைந்துள்ளனர். மேலும், சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்காமல் திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, வீட்டின் கழிவுநீர் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடையில் இணைத்தும், பெயர்த்தெடுத்த சிமென்ட் சாலையை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு, சிமென்ட் சாலை பணி appeared first on Dinakaran.

Tags : Mamallapuram Municipality ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் மாசி மக விழாவில் காணாமல் போன சிறுமி மீட்பு