×

கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் இரண்டு செய்திகளை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்… கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையிலான செய்தி 1: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 3,300 அரசு பள்ளி மாணவர்கள் CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்ப கட்டணம் நான்காயிரம் ரூபாயை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவச பயிற்சியையும் வழங்கவுள்ளது. நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற்கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது.

செய்தி 2: நாட்டிற்கே முன்னோடியாக 2009-ல் தலைவர் கலைஞர் ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வழிகாட்டினார். 2015-16-ல்தான் ஒன்றிய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது CMCHIS-ல் நமது அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் பயனைடைந்தவர்களில் 50 விழுக்காட்டினர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது நமது கல்வி, மருத்துவ துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Principal K. Stalin ,Dwight ,Chennai ,Principal ,Mu. K. Stalin ,M.U. K. Stalin ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...