×

வாக்குறுதியை நிறைவேற்றாத ஓபிஎஸ்சை எதிர்த்து உண்ணாவிரதம் அனுமதி வழங்கக் கோரி வழக்கு: போலீசார் பதிலளிக்க உத்தரவு

மதுரை: ஓபிஎஸ்சுக்கு எதிரான உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், தென்கரையைச் சேர்ந்த சன்னாசி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த ஊர் பெரியகுளம். இங்கு எம்எல்ஏவாக இருந்த காலக்கட்டத்தில் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், தேனி மாவட்ட மக்களுக்கும், குறிப்பாக பெரியகுளம் தொகுதி மக்களுக்கும் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.

இதனால், மக்கள் நலத்திட்டங்கள் பலருக்கும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஓபிஎஸ்சை கண்டித்து பெரியகுளத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தேன். ஆனால், போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்து, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், மனுவிற்கு போலீசார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post வாக்குறுதியை நிறைவேற்றாத ஓபிஎஸ்சை எதிர்த்து உண்ணாவிரதம் அனுமதி வழங்கக் கோரி வழக்கு: போலீசார் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : OPS ,Madurai ,ICourt ,Theni district ,Tenkarai ,Dinakaran ,
× RELATED கோயில் நகைகள் மாயம்.. இத்தனை...