×

அரசு பஸ்சில்ரூ.1 கூடுதலாக வாங்கியதால்ரூ.5,000 அபராதம்: நுகர்வோர் கோர்ட் உத்தரவு

நாமக்கல்: திருச்செங்கோட்டில் இருந்து இடைப்பாடிக்கு சென்ற பயணியிடம்ரூ.1 கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு போக்குவரத்து கழகத்துக்குரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சீதாராம்பாளையம் ராயல் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (56). இவர் கடந்த 2019 ஏப்ரலில் திருச்செங்கோட்டில் இருந்து, இடைப்பாடிக்கு அரசு டவுன் பஸ்சில் பயணித்தார். அவரிடம் கண்டக்டர்ரூ.17 டிக்கெட் கட்டணமாக வசூலித்தார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்ரூ.16 மட்டுமே என பாலசுப்ரமணியம் கூறினார். ஆனால் அதனை கண்டக்டர் ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால் கூடுதலாக வசூல் செய்யப்பட்டரூ.1 மற்றும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்குமாறு, கடந்த 2019ல் பாலசுப்பிரமணியம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், பயணியிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்தது, நேர்மையற்ற வணிக நடைமுறை, வழக்கு தாக்கல் செய்தவருக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ஒரு ரூபாயையும் மன உளைச்சலுக்கு இழப்பீடாகவும், வழக்கின் செலவு தொகையாகவும்ரூ.5 ஆயிரத்தை, 4 வாரத்திற்குள் அரசு போக்குவரத்து நிறுவனம் வழங்க வேண்டும் என நேற்று தீர்ப்பளித்தனர்.

The post அரசு பஸ்சில்ரூ.1 கூடுதலாக வாங்கியதால்ரூ.5,000 அபராதம்: நுகர்வோர் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tiruchengode ,Ethapadi ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி