×

திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்தணி: திருத்தணி – அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (9ம் தேதி) நண்பகல், 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும், தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுவாகவும் கொடுக்கலாம். எனவே திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்துள்ளார்.

The post திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Arakkonam Road ,Power Board ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ரூ.4 லட்சம் மதிப்பிலான 88 மரங்கள் ஏலம்