×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஸ்வியாடெக் சாம்பியன்

கான்கூன்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் மோதிய ஸ்வியாடெக், அதிரடியாக விளையாடி பெகுலாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்தார்.

அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பெகுலா எதிர்ப்பின்றி சரணடைய, ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி வெறும் 59 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால், மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஸ்வியாடெக் 9295 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். அரினா சபலென்கா (9050, பெலாரஸ்), கோகோ காஃப் (6580, அமெரிக்கா), எலனா ரைபாகினா (6365, கஜகஸ்தான்), ஜெஸ்ஸிகா பெகுலா (5975, அமெரிக்கா) அடுத்த இடங்களில் உள்ளனர்.

The post டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஸ்வியாடெக் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : WTA Finals ,Cancun ,Ika Sviatek ,Dinakaran ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்