×

கர்நாடக மூத்த அரசியல் தலைவர் டி.பி.சந்திரேகவுடா காலமானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, மேலவை உறுப்பினருமான டி.பி.சந்திரேகவுடா (87) உடல்நல குறைவால் காலமானார். காங்கிரஸ் சார்பில் எம்.பி, எம்எல்ஏவாக இருந்த சந்திரேகவுடா எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தார். காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டு கட்சியில் இருந்த விலகி பாஜவில் சேர்ந்து கடந்த 2009ல் எம்.பியானார். இந்நிலையில் உடல் நலம் பாதிப்பு காரணமாக சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் நேற்று காலமானார்.

The post கர்நாடக மூத்த அரசியல் தலைவர் டி.பி.சந்திரேகவுடா காலமானார் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,DP ,Chandra Gowda ,Bengaluru ,Parliament ,Legislative Assembly ,Upper House ,TP ,Senior Political Leader ,Dinakaran ,
× RELATED ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நெல்...