×

நேபாளத்தை தொடர்ந்து வங்கக் கடலில் நிலநடுக்கம்: தொடர்ந்து நடப்பதால் மக்கள் பீதி

புதுடெல்லி: நேபாளத்தை தொடர்ந்து வங்கக் கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தேசிய நிலநடுக்கவியல் மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘வங்கக் கடலில் இன்று அதிகாலை 5.32 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று டெல்லி-என்சிஆர் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களில் இது இரண்டாவது நிலநடுக்கம் ஆகும். கடந்த ஒரு மாதத்திற்குள் மூன்றாவது நிலநடுக்கம் ஆகும். கடந்த 4ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 128 பேர் இறந்தனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் வடமாநில மக்கள் பீதியில் உள்ளனர். இமயமலைப் பகுதியில் 8.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படப் போவதாக நீண்ட காலமாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நேபாளத்தை தொடர்ந்து வங்கக் கடலில் நிலநடுக்கம்: தொடர்ந்து நடப்பதால் மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Earthquake in ,of ,Bengal ,Nepal ,New Delhi ,Bay of Bengal ,in ,
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...