×

பருவமழை இடர்பாடு தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்புப்படி வடகிழக்கு பருவமழை 2023 தொடங்கயுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்பு மற்றும் புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள் சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்புகொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடு குறித்த புகார்களை எளிதில் தெரிவிக்க கீழ்காணும் தொலைபேசி எண்கள், அவசர கால உதவி எண்கள் மற்றும் சமூக வலைத்தளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள்: தொலைப்பேசி 044-27237107, 044-27237207, கைப்பேசி-வாட்ஸ்அப் எண்-9384056227. Twitter@KanchiCollector, Facebook@kanchicolltr, Instagram@kanchicolltr ஆகியவற்றிலும் தொடர்புகொள்ளலாம்.

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்கும் வகை யில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மழை வெள்ளத்தின்போது தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அறிக்கையில்கூறியுள்ளார்.

The post பருவமழை இடர்பாடு தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Kanchipuram ,Kalachelvi Mohan ,Meteorological Department ,Northeast ,
× RELATED தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம்