×

அறந்தாங்கி நகர் பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரால் கொசு உற்பத்தி அபாயம்

*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அறந்தாங்கி :அறந்தாங்கி நகர் பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரால் கொசு உற்பத்தி அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அறந்தாங்கி நகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி வருவதால் அறந்தாங்கி பகுதியில் தற்போது காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

அறந்தாங்கி நகர் குடியிருப்பு பகுதியான எழில்நகர்1-ம் வீதி, சோளக்கொல்லை முனீஸ்வரர் கோயில் அருகே தாழ்வான பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் மழை தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் கொசு அதிக அளவில் கொசு உற்பத்தியாகி உள்ளது. இந்த கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம் அறந்தாங்கி நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறபடுத்தி நகர் முழுவதும் கொசு மருந்து அடித்து டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி நகர் பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரால் கொசு உற்பத்தி அபாயம் appeared first on Dinakaran.

Tags : Aranthangi Nagar ,Arantangi ,Arantangi Nagar ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு மாணவனுக்கு மதுபாட்டில் குத்து: சக மாணவன் கைது