×

கார்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 817 கனஅடியாக உயர்வு..!!

பெங்களூரு: கார்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 300 கனஅடியில் இருந்து 817 கனஅடியாக உயர்ந்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 12 நாட்களுக்கு பின் 517 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 300 கனஅடியாக தொடர்ந்து நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 99.40 அடி, கபினி அணையின் நீர்மட்டம் 74.01 அடியாகவும் உள்ளது.

 

The post கார்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 817 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Dams ,Cauvery River ,BENGALURU ,KRS Dam ,Dinakaran ,
× RELATED ஆவத்திபாளையம் ஓடைக்குள் திறந்துவிடப்படும் சாயக்கழிவுகள்