×

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி

ஈரோடு: ஈரோட்டில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவனி சாலையில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் ஈரோடு மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு விட்டு விட்டு கனமழை என்பது பெய்தது ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக பவனியில் 12 சென்டிமீட்டரும் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 8 சென்டிமீட்டர் மழை பெய்தது.

ஈரோடு புறநகர் பகுதிகளில் பெய்த மழையானது பிச்சைக்காரன் ஓடை வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. இந்த கனமழையின் காரணமாக ஓடையில் பெருக்கெடுத்த தண்ணீரானது ஓடையினுடைய அருகில் இருக்கக்கூடிய குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கின்றது. குறிப்பாக பவானி சாலையில் இருக்கக்கூடிய அன்னை சத்தியா நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் தரை தளத்தில் இருக்கக்கூடிய வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் அவதிக்குள்ளாகினர். நள்ளிரவில் தண்ணீர் புகுந்திருந்த சூழ்நிலையில் அங்கு இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையர் செல்வா கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு மீட்பு பணிகளை திரிவு படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சி ஊழியர்கள் இந்த பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ஓடையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளில் அவற்றை சரிசெய்து தண்ணீரை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகின்றது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் வீடுகளில் இருந்த தண்ணீரை பாத்திரங்கள் மூலமாகவும் பொதுமக்கள் வெளியேற்றி வருகின்றனர். சற்று நேரத்தில் இந்த அணைத்து தண்ணீரும் வடிந்து இயல்பு நிலை திரும்பும் என பொதுமக்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

The post ஈரோட்டில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Erode ,Bhawani ,Dinakaran ,
× RELATED பறிமுதல் குட்கா பதுக்கி பேரம் 2 போலீஸ்காரர் சஸ்பெண்ட்