×

நிலக்கோட்டையில் விலை இல்லாததால் வீதிக்கு வந்த பூக்கள்

நிலக்கோட்டை, நவ. 7: நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செண்டுமல்லி, வாடமல்லி, கோழிக்கொண்டை, செவ்வந்தி, சம்பங்கி, கனகாம்பரம், மல்லிகை உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்காக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

தற்போது கார்த்திகை மாத விழாக்கால பண்டிகைகளை முன்னிட்டு குறுகிய காலபயிரான செண்டுமல்லி, செவ்வந்தி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட செண்டுமல்லி, செவ்வந்தி பூக்களின் வரத்து அதிகரித்து அதன் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் செண்டுமல்லி, செவ்வந்தி பூக்களை மார்கெட்டின் பின்புறம் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பூக்கள் குப்பை போல் குவிந்து கிடக்கிறது.

The post நிலக்கோட்டையில் விலை இல்லாததால் வீதிக்கு வந்த பூக்கள் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Chendumalli ,Vadamalli ,Kozhikondai ,Chevvanthi ,Sambangi ,Kanakambaram ,Mallikai ,
× RELATED மரக்கன்றுகள் நடல்