×

விஷ வண்டுகள் கொட்டி 10 பேர் படுகாயம்

 

தேன்கனிக்கோட்டை, நவ.7: தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள நெல்லுகுந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகப்பன் (46). இவர் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (37) என்பவரும், கூச்சுவாடி கிராமத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சோலார் விளக்கில் கூடுகட்டி இருந்த கதண்டுகள், அதிலிருந்து வெளியேறி சாலையில் சென்றவர்களை கொட்டி உள்ளது. கதண்டுகள் கொட்டியதில் அழகப்பன், மணிகண்டன் ஆகியோரும், அதே கிராமத்தை சேர்ந்த வேலுமணி (37), செல்லன் (60), முருகன் (40) மற்றும் 2 பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். சிலர் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதையறிந்த ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அனைவரையும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதில் பலத்த காயமடைந்த அழகப்பன் மற்றும் மணிகண்டன் ஆகியோர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post விஷ வண்டுகள் கொட்டி 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Alagappan ,Nellukundi ,
× RELATED பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்