×

வியாபாரிகளை மிரட்டிய ரவுடி குண்டாசில் கைது வேலூரில் பணம் கேட்டு

வேலூர், நவ.7: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமணி(33), ரவுடி. இவர் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி சிவமணி மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சிவமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சிவமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

The post வியாபாரிகளை மிரட்டிய ரவுடி குண்டாசில் கைது வேலூரில் பணம் கேட்டு appeared first on Dinakaran.

Tags : Rowdy Kundasil ,Vellore ,Vellore Netaji Market ,Rowdy Gundasil ,Dinakaran ,
× RELATED வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து...