- அவ்வதியார்கோயில் பபிலிக் பள்ளி
- அறந்தாங்கி
- ஆவதியார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளி
- அரந்தாங்கி
- அவுடியார்கோயில் அரசு உயர்நிலைப்பள்ளி
- ஆவுடியார்கோயில் அரசு பள்ளி
- தின மலர்
அறந்தாங்கி,நவ.7: அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் சப்.இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் ஏட்டு சாமியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிதி சார்ந்த இணையவழி குற்றங்கள், நிதி சாராத இணைய வழி குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினர். சைபர் கிரைம் குற்றத்தில் இருந்து எவ்வாறு நம்மை பாதுக்காக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் தமிழக அரசின் சார்பில் சைபர் கிரைம் சார்பில் ஏற்படும் குற்றங்களுக்கு இலவச அழைப்பு எண்ணின் 1930 முக்கியத்துவம் பற்றியும் எடுத்து கூறினர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தநிகச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், மேல்நிலை வகுப்பு அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
The post ஆவுடையார்கோயில் அரசு பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.
