×

விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 2023 மார்ச் 7ம் தேதி நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திலும், ஆரோவில் பகுதியில் நடந்த கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழ்நாடு அரசுக்கும், முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகளை தொடர்ந்தார். இந்த வழக்குகள் நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். பின்னர் விசாரணையை வரும் 21ம் தேதிக்கு நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Viluppuram Court C. V. ,Sanmugham Azhar ,VILUPURAM ,SENJCHI ,VILUPURAM DISTRICT ,AROVIL ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே கல்குவாரியில் மண்...