×

ரத்த நாளங்களில் இருந்த உறைவுக்கட்டிகளை உட்தமனி அகற்றல் சிகிச்சை முறையில் அகற்றம்: காவேரி மருத்துவமனை சாதனை

சென்னை: இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் முக்கிய இரத்த நாளங்களில் நிரந்தரமான இரத்த உறைவுக்கட்டிகளை உட்தமனி அகற்றல் என்ற சிகிச்சை முறையில் அகற்றி காவேரி மருத்துவமனை சாதனை செய்துள்ளது. 49 வயது உடைய நபருக்கு முதிர்ச்சியடைந்த இதய செயலிழப்பின் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்பட்டதுடன், கல்லீரலில் இரத்தவோட்ட தேக்கமும் உருவானது. மேலும் ஓய்வில் இருக்கும்போதே சுவாச சிரமம், இரு கால்களிலும் வீக்கம் மற்றும் இரவு நேரங்களின்போது சுவாசப் பிரச்சனை ஆகிய பாதிப்புகளோடு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு முழுமையான மதிப்பாய்விற்குப் பிறகு தீவிர சிடிஇபிஎச் மற்றும் சிக்கலான உறக்கத்தின்போது மூச்சு நின்றுவிடும் பிரச்சனையே இதய செயலிழப்பிற்கு வழிவகுத்திருக்கிறது என்று டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா தலைமையிலான நுரையீரலியல் துறை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

சிடிஇபிஎச் என்பது இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் முக்கிய இரத்த நாளங்களில் நிரந்தரமான இரத்த உறைவுக்கட்டிகள் இருக்கின்ற ஒரு பாதிப்பு நிலையாகும். சிடிஇபிஎச் பாதிப்பை உறுதிசெய்தன. அதைத் தொடர்ந்து நுரையீரலியல், இதயவியல் மற்றும் இடையீட்டு கதிரியக்க சிகிச்சை சேவைகள் துறை மருத்துவர்களின் கலந்தாலோசனை நுரையீரலின் உட்தமனி அகற்றலுக்கான, சிக்கலான அறுவைசிகிச்சை மிக நுட்பமாக திட்டமிடப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 4 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்த இவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதிலிருந்து 2 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் இப்போது அனைத்து செயல்நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் நுரையீரல் மாற்றுப்பதியம் மற்றும் நுரையீரல் மீட்புப்பிரிவின் இயக்குனர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா கூறியதாவது: நுரையீரல் உட்தமனியகற்றல் சிகிச்சையை வழக்கமாக நாங்கள் வழங்கிவருகின்ற போதிலும் இந்நோயாளிக்கு இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் அளவிற்கு சிடிஇபிஎச் அதன் இறுதி நிலையில் இருந்தது உட்பட பல்வேறு பாதிப்புகள் இந்நோயாளிக்கு இருந்தன. ஒத்துழைப்புமிக்க முயற்சிகளும் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளின் பயன்பாடும் இணைந்து இந்நோயாளிக்கு குணமளிக்கும் சாதகமான விளைவை பெற்று தந்திருக்கிறது. இந்நாட்டில் காவேரி மருத்துவமனை போன்ற மிகச்சிறந்த மருத்துவ மையங்களில் மட்டுமே இது சாத்தியம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரத்த நாளங்களில் இருந்த உறைவுக்கட்டிகளை உட்தமனி அகற்றல் சிகிச்சை முறையில் அகற்றம்: காவேரி மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,Chennai ,
× RELATED காவேரி மருத்துவமனை சாதனை 4 வயது...