×

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை அறிவிப்பு எம்.டி யோகா, ஓமியோபதி படிப்புக்கு நாளை விண்ணப்ப பதிவு துவக்கம்

சென்னை: ‘‘தமிழ்நாட்டில் உள்ள எம்.டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி ஆகிய பட்ட படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்’’ என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள எம்.டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி ஆகிய பட்ட படிப்புகளுக்கு 2023-2024ம் கல்வியாண்டில் மேற்படிப்புக்கான அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற ‘‘www.tnhealth.tn.gov.in.’’ என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை நாளை முதல் வரும் 17ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘‘செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106’’ என்ற முகவரிக்கு வரும் 17ம் தேதிக்குள் தபால், கூரியர் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை அறிவிப்பு எம்.டி யோகா, ஓமியோபதி படிப்புக்கு நாளை விண்ணப்ப பதிவு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Department of Indian Medicine ,Homeopathy ,Chennai ,Tamil Nadu ,Indian Medicine and Homeopathy Department ,Dinakaran ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...