×

மீனவ இளைஞர்கள் போட்டி தேர்வில் பங்கேற்க பயிற்சி: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டி தேர்வில் கலந்துகொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

சென்னை மாவட்டத்தைச் சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 2023-24ம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவிஇயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுகொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, ”மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77, சூரியநாராயணா செட்டி தெரு, ராயபுரம், சென்னை-13. அலுவலக தொலைபேசி எண்:9384824245, 9384824407 என்ற முகவரியில் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மீனவ இளைஞர்கள் போட்டி தேர்வில் பங்கேற்க பயிற்சி: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Chennai ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...