×

மதுராந்தகம் ஒன்றியம் விசிக செயற்குழு கூட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றிய விசிக செயற்குழு கூட்டம் நடந்தது. மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் மற்றும் மதுராந்தகம் நகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கதிர்வாணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கிட்டு பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னி வளவன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். மண்டல துணை செயலாளர் விடுதலை செல்வன், மாவட்ட பொருளாளர் கலை கதிரவன், மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார், மாநில நிர்வாகிகள் அப்பாதுரை மற்றும் சிறுத்தை வீரா, லிங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வரும் 20ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்துவது, திருமாவளவனின் 60 வயது நிறைவு விழா நடத்துவது, வாக்காளர் அடையாள அட்டைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மதுராந்தகம் ஒன்றியம் விசிக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam Union Executive Committee Meeting ,Madhurandagam ,Madhurandagam Union Executive Committee meeting ,Madhurandakam South Union ,Madhurandakam City ,Maduraandakam Union ,Executive ,Committee ,meeting ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே...