பொன்னேரி: மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிக்காக குடியிருப்பு பகுதிகளில் நில அளவிடு செய்த பகுதிகளை பார்வையிட்டு துரை சந்திரசேகர் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் இழப்பீடு தொகை பெற்று தரப்படும் என உறுதி அளித்தார். மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டா நில உரிமையாளர்களுக்கு, நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு ஈழப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி நிலம் கையகப்படுத்தும் இடத்தில் சுமார் 50 வீடுகள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆகும்.
இந்த கட்டிடங்களுக்கு இழப்பீடு தொகை சுமார் ரூ.16 கோடி இந்து அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களில் உள்ள கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் கோயில் நில வீடுகளுக்கு உரிய இழப்பீட்டு இந்து அறநிலையத்திதுறை அதிகாரிகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இது சம்பந்தமான செய்தி நேற்றுமுன்தினம் தினகரன் நாளிதில் வெளிவந்தது. இது குறித்து, பொன்னேரி தொகுதி எம்எல்ஏவும், வழக்கறிஞருமான துரை சந்திரசேகர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த குடியிருப்பு வாசிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜோஸ்பின், முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் எலிசெபத் ராணி, உதவியாளர் ராக்கி பிரசாத், துணைத் தலைவர் அலெக்சாண்டர், வார்டு உறுப்பினர் அபூபக்கர், காங்கிரஸ் நிர்வாகி அரவிந்த், அப்பகுதி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தேவராஜ், சுதாகர் பாபு சிக்கன் பாஸ்கர், பவுன்ராஜ் வெங்கடேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர். மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிக்காக குடியிருப்பு பகுதிகளில் நில அளவிடு செய்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி விரைவில் இழப்பீடு தொகை பெற்று தருவதாக உறுதி அளித்தார்.
The post கையகப்படுத்தும் கோயில் நில வீடுகளுக்கு இழப்பீடு உடனடியாக பெற்றுத் தரப்படும்: எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

