ஆவடி: ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரி(46). இவருக்கு திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் கிராமத்தில் 97 சென்ட் நிலம் இருந்தது. இந்நிலையில், சோழவரம், சிறுணியம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ஆள் மாறாட்டம் செய்து போலியான ஆவணங்கள் வாயிலாக, ஸ்ரீ ஹரிக்குச் சொந்தமான அந்த இடத்தை, ராமநாதன் என்பவருக்கு விற்றுள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த கார்த்திக்(32) என்பவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆள்மாறாட்டம் செய்து ரூ.10 கோடி நிலத்தை விற்றவர் கைது appeared first on Dinakaran.
