×

இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்: சரித் அசலங்கா சதம் வீண்

புதுடெல்லி: இலங்கை அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. நிசங்கா, குசால் பெரேரா இணைந்து இலங்கை இன்னிங்சை தொடங்கினர். பெரேரா 4 ரன் எடுத்து வெளியேற, கேப்டன் குசால் மெண்டிஸ் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். நிசங்கா, சமரவிக்ரமா தலா 41 ரன் விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, பேட்டிங்கை தொடங்க தாமதம் செய்ததாக மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டார்.

இதனால், இலங்கை 135 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், அசலங்கா- தனஞ்ஜெயா இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். தனஞ்ஜெயா 34 ரன்னில் ஆட்டமிழந்தார். தீக்‌ஷனா 21 ரன் எடுத்து ஷோரிபுல் பந்துவீச்சில் நசும் அகமதுவிடம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய அசலங்கா சதம் அடித்து அசத்தினார். அவர் 108 ரன் (105 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஹசன் சாகிப் பந்துவீச்சில் லிட்டன் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் கசுன் ரஜிதா டக் அவுட், துஷ்மந்த சமீரா (4) ரன் அவுட்டாக, இலங்கை 49.3 ஓவரில் 279 ரன் குவித்து ஆல் அவுட்டானது. வங்கதேச பந்துவீச்சில் ஹசன் சாகிப் 3, ஷோரிபுல், ஷாகிப் ஹசன் தலா 2, மிராஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 41 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஷான்டோ – கேப்டன் ஷாகிப் ஹசன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்தனர்.

ஷாகிப் 82 ரன் (65 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), ஷான்டோ 90 ரன் (101 பந்து, 12 பவுண்டரி) விளாசி மேத்யூஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வங்கதேசம் திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து வந்த முஷ்பிகுர் 10 ரன், மகதுல்லா 22 ரன், மிராஸ் 3 ரன் எடுத்து அவுட்டாக, ஆட்டம் பரபரப்பானது. எனினும், வங்கதேசம் 41.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து வென்றது. ஹ்ரிதய் 15 ரன், ஹசன் சாகிப் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் மதுஷங்கா 3, மேத்யூஸ், தீக்‌ஷனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

The post இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்: சரித் அசலங்கா சதம் வீண் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Sri Lanka ,Charit Asalanga ,New Delhi ,World Cup League ,Delhi ,Sarith Asalanga ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...