×

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்ட விவகாரம்: அமைச்சர் தென்னரசு பேட்டி

விருதுநகர்: இலங்கை மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். பின்னர் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் நான் பங்கேற்க இருந்தேன். 2 மணி நேரம் காத்திருந்தும் இலங்கைக்கு செல்ல ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை.

மலையகத் தமிழர் விழாவில் பங்கேற்க இலங்கைச் செல்ல இந்திய வெளியுறவுத்துறை அனுமதிக்கவில்லை. ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காததால் என்னுடைய பயண ஏற்பாட்டை ரத்து செய்து விட்டேன். நவம்பர்1ம் தேதி இரவு 9.30க்குப் பிறகே ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. ஒன்றிய அரசு அனுமதி வழங்க தாமதித்ததால் இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்து விட்டேன். நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி அனுப்ப முடிவு செய்தார்.

இலங்கையில் உள்ள விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வாழ்த்துச் செய்தி அனுப்ப முதல்வர் முடிவு செய்தார். 2ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் முதல்வரின் வாழ்ந்துச் செய்தியும் அனுப்பி வைப்பு. என்ன காரணத்தினாலோ முதல்வரின் வாழ்த்துச் செய்தி மலையகத் தமிழர் விழாவில் ஒளிபரப்பப்படவில்லை. என்ன காரணத்தினால் முதல்வரின் வாழ்த்துச் செய்தி ஒளிபரப்பப்படவில்கை என்பது எனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கை மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்ட விவகாரம்: அமைச்சர் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Sri Lankan Highland Tamil Festival ,Minister Tennarasu ,Virudhunagar ,Minister ,Thangam Tennarasu ,Tamil ,Nadu ,Thannarasu ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு...