×

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரி நவ.15க்கு முன் விண்ணப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரி நவம்பர்15க்கு முன் விண்ணப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, ஆர்.எஸ்.எஸ் அனுமதி கோரியிருந்தது. இதனை விசாரித்தசென்னை உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியதோடு, அதுகுறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ‘இந்த வழக்கில் உயர்நீதின்ற தனி நீதிபதி கிரிமினல் மனுவை விசாரித்தாரா? அல்லது சிவில் மனுவை விசாரித்தாரா’ என கேட்டார்.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அதுகுறித்த ஆவணங்களை இன்று தாக்கல் செய்வதாக நீதிபதிகள் முன்னிலையில் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரி நவம்பர் 15க்கு முன் விண்ணப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேரணிக்கு அனுமதி கோரி புதிதாக கோரிக்கை வைக்கவும், ஆர்.எஸ்.எஸ். பேரணி செல்லும் வழித்தடங்கள் குறித்த தகவல்களை அரசுக்கு நவம்பர்.9 க்குள் சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரி நவ.15க்கு முன் விண்ணப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,RSS ,Delhi ,RSS rally ,Tamil Nadu ,
× RELATED அலோபதி மருத்துவத்துக்கு எதிராக...