×

திருப்பூர் பேருந்து நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர்: திருப்பூர் பேருந்து நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவர் ஆக்ட்டிங் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இவர் பழனி சென்றபோது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பவளக்கொடி(சாந்தி) என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சாந்தியை திருப்பூர் அடுத்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியமர்த்தி ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றியபடியே அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சாந்தி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கணேசனுக்கு தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் பேசி இருவருக்குள்ளும் வாக்குவாதம் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி திருப்பூருக்கு வந்துள்ள கணேசன் அங்கு பேருந்து நிலையத்தில் சாந்தி அங்கு வேறு ஒரு நபருடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டதும் ஆத்திரமடைந்து தான் கொண்டுவந்திருந்த கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து திருப்பூர் தெற்கு போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி இரவு நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளானது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருப்பூர் பேருந்து நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tirupur bus station ,Tirupur ,Dindigul District ,Othanchatram… ,Dinakaran ,
× RELATED தாராபுரத்தில் மது அடிமைகள் மறுவாழ்வு...