×

ஜெர்மனி பெண் அமைச்சரை முத்தமிட்ட குரோஷியா அமைச்சர்: அத்துமீறி தரப்பட்ட எதிர்பாராத முத்தத்தால் எழுந்தது சர்ச்சை

பெர்லினின்: ஜெர்மனி தலைநகர் பெர்லினியில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அந்நாட்டு பெண் அமைச்சரை குரோஷியா வெளியுறவு அமைச்சர் திடீரென முத்தமிட்ட நிகழ்வு சலசலப்பையும், கடும் விமர்சனைத்தையும் கிளப்பியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளில் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு பெர்லினின் நகரில் நடைபெற்றது. மாநாடு முடிந்து குழு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக அமைச்சர்கள் ஓரிடத்தில் கூடினர்.

அப்போது வரிசையில் நிற்க வந்த ஜெர்மானிய வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் அன்னாலெனா பேர்பாக்கை குரோஷியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கார்டன் கிர்லிக் ராட்மேன் கைகுலுக்கி எதிர்பாராத விதமாக முத்தமிட்டார். தனது ஒப்புதல் இல்லாமல் எதிர்பாராத நேரத்தில் அத்துமீறி தரப்பட்ட முத்தத்தால் பெண் அமைச்சர் அன்னாலெனா நெளிந்தார். இதை பார்த்த சக அமைச்சர்கள் குரோஷியா அமைச்சரின் இந்த செயல் மிகவும் அருவருப்பானது என்றும் சாடினர். அதை தொடர்ந்து தனது செயலுக்கு குரோஷியா அமைச்சர் மன்னிப்பு கோரினார்.

The post ஜெர்மனி பெண் அமைச்சரை முத்தமிட்ட குரோஷியா அமைச்சர்: அத்துமீறி தரப்பட்ட எதிர்பாராத முத்தத்தால் எழுந்தது சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Berlin ,foreign ministers' ,foreign minister ,
× RELATED யுரோ கோப்பை கால்பந்து; ஸ்பெயின்,...