×

விம்கோ நகர் – சுங்கச்சாவடி நிலையங்கள் இடையே ஒருவழிப்பாதையில் மட்டும் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!!

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நீல வழித்தடத்தில் விம்கோ நகர் – சுங்கச்சாவடி நிலையங்கள் இடையே ஒருவழிப்பாதையில் மட்டும் 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி டி.எம்.எஸ். நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.விம்கோ நகர் மேட்ரோ ரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை தொழில் நுட்ப வல்லுனர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டுள்ளனர் தொழிலநுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.  மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர்
தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விம்கோ நகர் – சுங்கச்சாவடி நிலையங்கள் இடையே ஒருவழிப்பாதையில் மட்டும் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Metro ,Vimco Nagar ,Toll stations ,CHENNAI ,Chennai Metro ,Wimco Nagar ,Toll Station ,Wimco Nagar – ,
× RELATED கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் – திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்